வழக்கறிஞர் சங்கம் சார்பாக நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்;
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண் வழக்கறிஞர் பிரேமலதா மற்றும் அவரது குடும்ப பெண் நபர்களையும் பழனி கோவில் தற்காலிக காவல் பணியாளர் மதுரைவீரன் ஆபாசமாக பேசியும் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து காவல் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது புகார் அளித்ததில் 30 மணி நேர வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பெண் வழக்கறிஞர் பிரேமலதா மீது பொய்யான குற்ற வழக்கு பதிவு செய்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை கண்டித்தும் புகாரில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.