கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;

Update: 2025-07-14 04:18 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பொன்னிமாந்துறை கல்லறை மேடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் பெரிய பொன்னிமாந்துரையை சேர்ந்த சின்னப்பன் மகன் சார்லஸ்(36) என்றும் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News