புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா

சிங்கம்புணரியில் புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது;

Update: 2025-07-14 10:30 GMT
சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவுத்துறையின் சார்பில் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி புதிய அலுவலக கட்டடத்திற்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளவர் இராஜேந்திர பிரசாத், துணைப் பதிவளார் செந்தில் குமார், கூட்டுறவு சார் பதிவாளர் (சிங்கம்புணரி சுந்தரபெருமாள், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News