சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது;
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18.7.25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்