வாசவிகன்னிகாபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா;

Update: 2025-07-14 13:00 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் ஆரிய வைசியர் சமூகத்திற்கு சொந்தமான வாசவி கன்னிக பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி முதல் யாக பூஜைகள் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு மஹா பூரணாஹுதியும் பின்னர் கடம் புறப்பாடும் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News