பொதுமக்கள் குடியிருப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியிருப்பு போராட்டம். சுமார் 100க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்கள் அடுப்பு விறகு உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து போராட்டம்;
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஆலக்குவார்பட்டி ஏ.டி காலனி. இப்பகுதி மக்களுக்கு 1998இல் சுமார் 400 பேருக்கு தமிழக அரசு இலவச பட்டா வழங்கியுள்ளது மேலும் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் இந்நிலையில் இவர்களுக்காக கொடுத்த இலவச பட்டாவை மற்ற நபர்களுக்கு தற்போது தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சிய பதில் கூறி வருவதாகவும் கூறி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் குடம் அடுப்பு விறகு சமைப்பதற்கான பொருட்கள் என கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வரை இங்கேயே தங்கி குடியிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.