சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1.00 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை https://tinyurl.com/Panchayat award (அல்லது) https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/Samooga_Nallinakka_Ooratchi_Award_Application.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.