ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியில் தொல்லை செய்து கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கிய மாவட்ட நீதிபதி

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியில் தொல்லை செய்து கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கிய மாவட்ட நீதிபதி;

Update: 2025-07-14 14:51 GMT
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கியது மட்டுமில்லாமல் எந்த ஒரு சலுகையும் கொடுக்கக் கூடாது எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அரசு மற்றும் ரயில்வே துறை தலா 50 லட்சம் ரூபாய் என ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்ட திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி* ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்நத்த 4- மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதி என்கிற பெண் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வந்த நிலையில்.. தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கடந்த இரண்டாம் மாதம் திருப்பூர் ரயில்வே நிலையத்தில் கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது கர்ப்பிணி பெண் ரயில் கழிவறைக்கு சென்றபோது அங்கும் ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் 4-மாத கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பினார். ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்ட ரயில்வே போலீசார் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் தொடர்ந்து தனியாக செல்லும் பெண்களை கண்காணித்து பாயில் கூட்டத்தில் ஈடுபடும் பதிவேடு குற்றவாளி ஆன ராமராஜை கேவி குப்பத்தில் வைத்து கைது செய்து வெட்டி பிரிவதற்கு வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஹேமராஜ் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இதன் தீர்ப்பு இன்று திங்கட்கிழமை மாவட்ட நீதிபதியால் அதிரடியாக வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பாலியல் வன்முறை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ்க்கு வாழ்நாள் முழுவதும் சிறை வழங்கியும் சிறை தண்டனை அனுபவிக்கும் போது எந்த விதமான சலுகையும் கொடுக்கக் கூடாது அதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அபராத தொகையாக 85 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தார் மேலும் பாதிக்கப்பட்ட பெண் ரேவதிக்கு மாநில அரசு 50 லட்சம் ரூபாயும் ரயில்வே நிர்வாகம் 50 லட்சம் ரூபாயும் டெபாசிட் தொகையாக ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக மாநில அரசு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற உத்தரவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது பெரும வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News