காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!;

Update: 2025-07-15 04:05 GMT
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது மேலும் அவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி வ உ சி சந்தை அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிக்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் நடைபெற்றது இதில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Similar News