தேவகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தேவகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் தனியார் திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். உடன் தேவகோட்டை வட்டாட்சியர், ஆணையாளர் உட்பட பலர் பங்கேற்றனர்