தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்றது;
திண்டுக்கல் அகில இந்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கோரிக்கை விளக்க உரையினை மாவட்ட செயலாளர் கேசவன் எடுத்துக் கூறினார் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அமுல்ராஜ், மணிக்காளை, ராஜமாணிக்கம், ராமமூர்த்தி தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊதிய குழுவின் பரிந்துரைகளிலிருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும், 1995 ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி 55 விழுக்காட்டை அனைத்து மாநில அரசுகளுக்கும் உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை மாநில அரசுகளை நடத்த வேண்டும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.