காமராஜர் முகமூடி வேட்டி சட்டை அணிந்து பேரணி
வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி முகமூடி வேட்டி சட்டை துண்டு அணிந்து பேரணியாக வந்து அசத்திய பள்ளி மாணவர்கள்;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி நாளாக கொண்டாடப்பட்டது இதனைத் தொடர்ந்து காமராஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக காமராஜர் போல் வேஷ்டி சட்டை துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். பள்ளி முதல்வர் அருட்தந்தை பால்ராஜ் தலைமையில் நடந்த பேரணியை பங்குத்தந்தை எட்வர்ட் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவிகளும் வேஷ்டி சட்டை அணிந்து வந்து பேரணியில் பங்கேற்றது கம்பீரமாக இருந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் கீழடி நம் தாய்மடி, உலகின் மூத்த மொழி செம்மொழி, அனைவரும் உயர் கல்வி பயில வேண்டும், இடைநில்லா கல்வி பெறவேண்டும் என விழிப்புணர்வு பதாகையை ஏந்தி சென்றனர் காமராஜர் முகமூடி அணிந்து அவரைப் போல் வேஷ்டி சட்டை துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் மாணவர்கள் காமராஜர் என்ற பெயர் எழுத்து வடிவத்தில் மைதானத்தில் நின்று அவரது பிறந்தநாளை கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக கொண்டாடினர் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.