மாலையை கழட்டி கீழே தூக்கி எறிந்த தவெக-வினர்
காமராஜரின் சிலையில் இருந்த மாலையை கழட்டி கீழே தூக்கி எறிந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் கண்டனம்;
நாடு முழுவதும் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில். திண்டுக்கல் நகர் மத்தியில் அமைந்துள்ள 8 அடி உயரமுள்ள வெண்கல சிலைக்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் அதி காலை முதல் இருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு முன்பாக அவர் கழுத்தில் நிர்வாகிகள் அணிவித்து சென்ற மாலையை கழற்றி கீழே வைக்காமல் மாலைகளை கழற்றி கீழே தூக்கி எறிந்த சம்பவம் அங்கு இருந்த நிர்வாகிகளிடமும் மற்ற இயக்கத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது நாங்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்து அணிவித்த மாலைகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவமரியாதை செய்து தங்கள் மாலைகளை கழற்றி கீழே எறிந்ததாக சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வருகாலங்களில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தொண்டர்களிடையே ஒழுக்கத்தையும், மரியாதையும் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டுமென்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை வைத்துள்ளனர்.