தனியார் பள்ளி ஆசிரியர் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை

திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஆசிரியர் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை;

Update: 2025-07-15 19:37 GMT
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த சேசுரத்தினம் மகன் ஜோசப்எட்வின் (45) இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக மன உளைச்சலில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோசப்எட்வினின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News