அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் கைது
மானாமதுரை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்தனர்;
மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரி பகுதியில் அரசு அனுமதி இல்லாத இடத்தில் லாரியில் கிராவல் மண் அள்ளுவதாக மானாமதுரை எஸ்.ஐ., குகனுக்கு தகவல் வந்தது. போலீசாருடன் சேர்ந்து மானாமதுரை கண்ணார் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து லாரியில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பொட்டி தட்டியைச் சேர்ந்த சக்திகுமார் (23), மானாமதுரை அருகே உள்ள பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (41), இருவரையும் கைது செய்தார்