திண்டுக்கல்: கன்னிவாடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ரெட்டியார்சத்திரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு வட்டாரத் தலைவர் எல்.முருகானந்தம் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வருகிற 1-ந்தேதி ஆத்தூர் வருகை தரும் மாநிலத்தலைவர் செல்வப் பெருந்தகைக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும், கல்வி உதவித்தொகை வழங்குவது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.