கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
சிவகங்கையில் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் / சமூக நல இயக்குநர் சங்கீதா, இன்று அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தலைமையில், ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.