மது போதையில் கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியதில் கண் விழி முற்றிலும் பாதிப்பு. மருத்துவமனையில் அனுமதி
தாக்குதல்;
தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவன் சன்னாசி (42). நேற்று பெரியகுளம் வடுகபட்டி சாலைப் பகுதியில் சன்னாசி அவரது நண்பர்களோடு மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்போது அந்த வழியில் வந்த பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான விக்கினேஷ் என்பவரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சன்னாசி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை கொண்டு விக்னேஷ்- தலையில் தாக்கியுள்ளார். அப்பொழுது பீர் பாட்டில் கண்ணாடி உடைந்து இடது கண்ணில் குத்தியது. இதில் கண்விழிக்குள் படுகாயம் ஏற்பட்டு கண்விழி முழுவதுமாக பாதிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் விக்கி அதே இடத்தில் விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் விழி பாதிப்பு குறித்து பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷின் கண் விழி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சன்னாசியை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையில் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர். சன்னாசி என்பவர் மீது தென்கரை காவல் நிலையத்தில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.