மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் நிழற்குடை
சேதமான நிலையில் நிழற்குடை;
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வள்ளியூர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடை மிகவும் சேதம் அடைந்த நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் காணப்படுகின்றது. இதனால் பெரிய விதமான அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் சம்பந்தப்பட்ட நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.