மகளிர்களுக்கு ஒரு லட்சம் மானிய வெளியில் ஆட்டோ
தொழிலாளர் நலத்துறையின் மூலம் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், வழங்கினார்;
தொழிலாளர் நலத்துறையின் மூலம் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், வழங்கினார் --------------------------- தொழிலாளர் நலத்துறையின் மூலம் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று (21.07.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் ஓட்டுநர் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் பொருட்டும் தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் உறுப்பினர்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சொந்தமாக இலகுரக மற்றும் கனரக வாகனம் வைத்திருக்காத திருநங்கை பெண் ஓட்டுநர்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ அல்லது டாக்சி என ஏதேனும் ஒரு வாகனத்தை மட்டும் வாங்க அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக திருமாந்துறையை சேர்ந்த திருமதி நந்தினி என்பவருக்கும், நொச்சிக்குளத்தைச் சேர்ந்த திருமதி ரம்யா என்பவருக்கும் தலா ரூ.1 லட்சம் மானிய உதவியுடன் ஆட்டோக்ககளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் நபர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும், இதுவரை மேற்படி நலவாரியத்தில் பதிவு செய்யாத ஓட்டுநர்கள் புதிதாக பதிவு செய்து, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம் விபத்து மரணம் மற்றும் தங்களது குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த ஓட்டுநர்கள் அதிக அளவில் மேற்படி வாரியத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மு.பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.