கணவர் மாயம். மனைவி புகார்
மதுரை அவனியாபுரம் அருகே கணவர் மாயம் என மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்;
மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாகுடி அய்யனார் கோவில் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளி பின்புறம் வசித்து வரும் வள்ளி மயில் என்பவரது கணவர் நாகராஜன் (27) முன்பு முத்தூட் பைனான்ஸ் சிலைமான் கிளையில் வேலை பார்த் வந்ததாகவும். கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வேலையை விட்டு நின்று விட்டார். வேறு வேலை கிடைக்காமல் வெளிநாடு செல்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந் ததாகவும். கடந்த 15.06.2025 தனது கணவர் நாகராஜன் தனக்கு தெரிந்த பெருங்குடி பொன் சேர்ந்த பசும் நகரைச் நிவேதா என்ற பெண்ணுடன் செல்போனில் பேசுவது தெரிந்து வள்ளிமயில் கணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது .இந்த நிலையில் கடந்த 16.06.2025–ம் தேதி நாகராஜன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தரும்படி அவனியாபுரம் போலீசில் வள்ளிமயில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.