"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் குவிந்த மக்கள்
மதுரை திருமங்கலம் நகராட்சி நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.;
மதுரை திருமங்கலம் நகராட்சி பெருமாள் கோவில் அருகே உள்ள சிவ லட்சுமி மஹாலில் தமிழக அரசு சார்பாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று (ஜூலை .22) கலைஞர் உரிமைத்துறை நகராட்சி நிர்வாகம் வருவாய்த் தொகை, மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் பல அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள் பொதுமக்களுக்கு உதவுமாறு திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.