மஞ்சள் காமாலை தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க தீர்மானம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வார்டு நிர்வாகிகள் கூட்டம் மேலப்பாளையம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் 45வது வார்டில் மீண்டும் தலை தூக்கும் மஞ்சள் காமாலை தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.