மூளிக்குளம் பகுதியில் மாநகராட்சி மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டலம் 10வது வார்டுக்கு உட்பட்ட மூளிக்குளம் பகுதியில் இன்று (ஜூலை 23) திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மண்டல தலைவர் ரேவதி பிரபு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.