திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் இன்று (ஜூலை 23) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாநில துணை செய்தி தொடர்பாளர் நெல்லை தமிழரசு தலைமையில் தாமிரபரணி ஆற்றில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.