போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கோபி (32) தொழிலாளியான. இவருக்கு நீண்டகால மாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்து அவர் சம்பவம் அன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கோபி உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.