காவேரிப்பட்டணம் அருகே சரக அளவிலான கைப்பந்து போட்டி.

காவேரிப்பட்டணம் அருகே சரக அளவிலான கைப்பந்து போட்டி.;

Update: 2025-07-24 02:13 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சரக அளவிலான கைப்பந்துப் போட்டி தொடக்க விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கம்' ஒருமைப்பாடு, ஆகியவற்றின் அடையாளமாக சமாதான புறாக்கள் மாணவர்கள் பறக்க விட்டனர். இதில் மோரனஅள்ளி, காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளிகள் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News