பூங்காவில் போதை ஆசாமிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்!
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் போதை ஆசாமிகள் இருவர், பூங்கா காவலாளி மற்றும் நடைபயிற்சி சென்ற ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.;
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா உள் வளாகத்தில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் போதை ஆசாமிகள் மக்கள் நடமாடும் நடைபாதையில் படுத்து உறங்கியுள்ளனர். இதையடுத்து அவர்களை கொஞ்சம் நகர்ந்து இருக்க சொன்போது பூங்காவின் காவலரையும் நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவரையும் போதை ஆசாமி இருவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே பூங்காக்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.