நோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
தூத்துக்குடியில் ட்ரைல் பிளேஸர்ஸ் ரோட்டரி சங்கத்தின் 5வது நிர்வாகக் குழு பதவியேற்பு விழா டிஎஸ்எஃப் ஹோட்டலில் நடந்தது.;
தூத்துக்குடியில் ட்ரைல் பிளேஸர்ஸ் ரோட்டரி சங்கத்தின் 5வது நிர்வாகக் குழு பதவியேற்பு விழா டிஎஸ்எஃப் ஹோட்டலில் நடந்தது. முன்னதாக வழக்கறிஞர் ஸ்வர்ணலதா ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். ராஜகுமாரி ரோட்டரி நான்கு வழி சோதனை வாசித்தார். சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவி தனம் ராதா வரவேற்று பேசினார். சங்கத்தின் உடனடி முன்னாள் செயலாளர் பூர்ணிமா ஆண்டு அறிக்கை வாசித்தார். வழக்கறிஞர் சுபாசினி இந்த ஆண்டு புதிய தலைவியை அறிமுகம் செய்தார். சங்கத்தின் புதிய தலைவியாக ஆயிஷா பர்வீன், செயலாளராக திவ்யா பிரைட்லின் மற்றும் நிர்வாகக் குழுவினர் பதவியேற்றுக்கொண்டனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் நாமினி Dr. எபேனேஷ் பென்சேம் புதிய தலைவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து தலைவி ஆயிஷா பர்வீன் ஏற்புரை வழங்கி இந்த ஆண்டின் நிர்வாக குழுவை அறிமுகம் செய்தார். சங்கத்தில் 10 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் தெருவோரங்களில் தொழில் செய்யும் இரு ஆதரவற்ற பெண்களுக்கு நிழல் குடைகள் வழங்க பெற்றன. சீனா வானா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எக்ஸ்டென்ஷன் நடு நிலை பள்ளிகளுக்கு உதவிகள் செய்ய பட்டன. ரோட்டரி உதவி ஆளுநர் பரமேஸ்வரன், ஜேசிஐ குயின் பீஸ் பட்டய தலைவி ஜெர்லின், துணை மேயர் ஜெனிடா, டிஎஸ்எஃப் மேனேஜிங் டைரக்டர் சந்திரா மனோகரன், மற்றும் சங்கத்தின் ஆலோசகர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலை பள்ளி இயக்குனர் லட்சுமி ப்ரீத்தி கௌரவ விருந்தினராக உரையாற்றினார். நிறைவாக செயலாளர் திவ்யா பிரைட்லின் நன்றி கூறினார். விழாவில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் பல்வேறு ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஜேசீஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.