திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று (ஜூலை 24) காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அருவியை பார்த்து வருவதற்கு தடை ஏதும் இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.