தேவகோட்டையில் பிளக்ஸ், பிரிண்டிங் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
தேவகோட்டையில் பிளக்ஸ், பிரிண்டிங் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் அறிவுறுத்தலின்படி, நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பெரியார் தலைமையில் பிளக்ஸ் பிரிண்டிங் மற்றும் அச்சகம் உரிமையாளர் உடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட பிளக்ஸ் நோட்டீஸ் அடிக்க வேண்டும், தேவையற்ற வசனங்களை பயன்படுத்தக் கூடாது, உரிய அனுமதி பெற்றே பிளக்ஸ் பேனர்கள், நோட்டீஸ்கள் கொட்டுவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். பிளக்ஸ் நோட்டீஸ் அடிக்க வரும் நபர்களிடம் அரசு விதிமுறைகளை தெரிவிக்க வேண்டும் எனவும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். உடன் நகர் சார்பு ஆய்வாளர்கள் ஜெகதீஷ், மணிகண்டன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலா ஆகியோர் இருந்தனர்