ஓசூர் அருகே மாணவி துக்கிட்டு தற்கொலை.
ஓசூர் அருகே மாணவி துக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் நியூ கே.சி.சி. நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய 15 வயது மகள் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவர் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும் இதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் அல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் அட்கோ போலீசார் மாணவியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.