திருப்புவனம் அருகே கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை
திருப்புவனம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள நயினார்பேட்டை கிராமத்தில் ஆறுமுகம் (வயது 35), அவரது மனைவி ரேவதி (வயது 32) ஆகியோர் தங்களது வீட்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த ஆறுமுகம், கடந்த சில மாதங்களாக மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்