தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்கிட்டு பெண் தற்கொலை.
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்கிட்டு பெண் தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள காரண்டபள்ளி கிராமத்தில் வசிப்பவர் சிவா (39) எலக்ட்ரீசியன். இவரது மனைவி அஞ்சலி (35) இவர்களுக்கு குழந்தை இல்லை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அஞ்சலி கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவருக்கு குழந்தை பிறக்காது என தெரியவந்தது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அஞ்சலி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.