காவேரிப்பட்டணம் அருகே பாட்டியை தாக்கிய பேரன் கைது.

காவேரிப்பட்டணம் அருகே பாட்டியை தாக்கிய பேரன் கைது.;

Update: 2025-07-25 01:52 GMT
காவேரிப்பட்டணம் அருகே பாட்டியை தாக்கிய பேரன் கைது கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மச்சிகண்ணன் கொட்டாய்யை சேர்ந்தவர் சக்திவேல் (28) டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் தனது பாட்டி சின்னகண்ணுவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் பாட்டியை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த சின்னகண்ணு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்னகண்ணு கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Similar News