அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் " மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நெல்லைக்கு வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி வருவதை முன்னிட்டு நெல்லையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் டிஜிட்டல் பேனர் அமைத்து வருகின்றனர்.