நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் வருகின்ற 27ஆம் தேதி நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாரதி ஹோமியோ கிளினிக் சார்பில் மாபெரும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான துண்டு பிரசுரங்களை இன்று மேலப்பாளையம் பள்ளிவாசல் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினர் வழங்கி மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்தனர்.