தருவை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்;
திருநெல்வேலி மாவட்டம் தருவை ஊராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூட்டத்தில் இன்று (ஜூலை 25) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தருவை ஊராட்சி மன்ற தலைவர் கௌரி லட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.