திருமாநிலையூர்-டூவீலரை வேகமாக இயக்கியதால் சென்டர் மீடியனில் மோதி விபத்து.
திருமாநிலையூர்-டூவீலரை வேகமாக இயக்கியதால் சென்டர் மீடியனில் மோதி விபத்து.;
திருமாநிலையூர்-டூவீலரை வேகமாக இயக்கியதால் சென்டர் மீடியனில் மோதி விபத்து. கரூர் மாவட்டம் மாயனூர் அருகே செக்கணம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் லோகேஸ்வரன் வயது 22. இவர் ஜூலை 25ஆம் தேதி காலை 11: 45 மணி அளவில் சுக்காலியூரிலிருந்து திருமாநிலையூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். அப்போது திருமாநிலையூர் பஸ் டிப்போ அருகே வந்தபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லோகேஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த லோகேஸ்வரனின் தந்தை மாணிக்கம் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிவிபத்து ஏற்படுத்திய லோகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்