பெரம்பலூரில் முழு உடல் தான பதிவு முகாம்
பெரம்பலூர் இலக்கிய வட்டம் சார்பாக சிறுகதை எழுத்தாளர்களுக்கு செகாவ் விருது நிகழ்வில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து உடல் தான பதிவு முகாம்;
பெரம்பலூரில் முழு உடல் தான பதிவு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள அஸ்வின்ஸ் வளாகம் விருஷக மஹாலில் 26-07-2025 இன்று பெரம்பலூர் இலக்கிய வட்டம் சார்பாக சிறுகதை எழுத்தாளர்களுக்கு செகாவ் விருது நிகழ்வில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து உடல் தான பதிவு முகாம் நடத்தியது. விருதுக்கான நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களில் அரசு கல்லூரி பேராசிரியர், அரசு பேருந்து நடத்துனர், மாரத்தான் மாற்றுத்திறனாளி உட்பட 10 நபர்கள் அறக்கட்டளையின் தலைவர் நா.ஜெயராமன் அவர்களிடம் தமது இயற்கை மரணத்திற்கு பிறகு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புக்கு உதவிடும் வகையில் முறையே உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து ஆர்வமுடன் படிவம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வரலாற்றில் பெரம்பலூர் நூலாசிரியர் ஜெயபால் இரத்தினம், பதியம் தமிழ்மாறன், வேப்பந்தட்டை அரசு கல்லூரி பேராசிரியரும், பங்குடி நூலாசிரியருமாகிய மூர்த்தி, தமிழ்ச்செம்மல் த.மாயகிருஷ்ணன், கிருஷ்ணாபுரம் வணிகர் நல சங்க தலைவர் நா.துரை, அரும்பாவூர் கூட்டுறவு வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையின் உதிரம் நாகராஜ், மகேஸ்குமரன், சபரி துரைராஜ், செங்குணம் குமார் அய்யாவு, ஆற்றும் கரங்கள் அறக்கட்டளையின் அருண் ஆப்ரஹாம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக விழா நாயகன் வெங்கலம் ச.மோகனுக்கு உதிரம் நண்பர்கள் சார்பாக துணிப்பை மற்றும் புத்தகம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.