அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பெரம்பலூர் அருகே செங்குணம் மகா மாரியம்மன் தேர் திருவிழா. சிறுவர் முதல் பெரியவர் வரை தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர் பக்தர்கள்;

Update: 2025-07-27 15:50 GMT
பெரம்பலூர் அருகே செங்குணம் மகா மாரியம்மன் தேர் திருவிழா. அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர் பக்தர்கள். பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 2025 சூலை 28 திங்கள்கிழமை நடைபெறுகிறது . இதனிடையே சூலை 27 இன்று காலையில் பக்தர்கள் அம்மனுக்கு பால் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மாலையில் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் , பூ மிதித்தும் என பல்வேறு வகையில் நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது மருவத்தூர் காவல் துறையினர் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி உதவினர்.

Similar News