அம்மன் வெட்டு குதிரை வாகனத்தில் திருவீதியுலா
பொங்கல் மற்றும் மாவிளக்கு சிறப்பு வழிபாட்டுடன் அம்மனுக்கு மண்டல பூஜையுடன் தீபாதாரணை காண்பிக்கப்பட்டு வான் வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சியுடன் 7 வது நாளில் வெட்டு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது..;
பெரம்பலூர் அருகே செங்குணம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் 7 வது நாளில் அம்மன் வெட்டு குதிரை வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 21 அன்று முதல் நாள்தோறும் இரவில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சூலை 27 நேற்று இரவு ஆலயத்தில் பொங்கல் மற்றும் மாவிளக்கு சிறப்பு வழிபாட்டுடன் அம்மனுக்கு மண்டல பூஜையுடன் தீபாதாரணை காண்பிக்கப்பட்டு வான் வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சியுடன் 7 வது நாளில் வெட்டு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.. -