லைட் ஹவுஸ் அருகே ஆட்டோ மீது டூ வீலர் மோதி விபத்து.இருவர் படுகாயம்.
லைட் ஹவுஸ் அருகே ஆட்டோ மீது டூ வீலர் மோதி விபத்து.இருவர் படுகாயம்.;
லைட் ஹவுஸ் அருகே ஆட்டோ மீது டூ வீலர் மோதி விபத்து.இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா , வாங்கல் ஈவிஆர் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் வயது 45. இவர் ஜூலை 27ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது ஷேர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். இவரது வாகனம் லைட் ஹவுஸ் அருகே உள்ள தனியார் மருத்துவமனை எதிரே வந்த போது , எதிர் திசையில் கரூர் , தாந்தோணிமலை , அசோக் நகரை சேர்ந்த பாஸ்கரன் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் , ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கஜேந்திரன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த கரூர் காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.