முடக்கு சாலையில் டூவீலரில் வேகமாக இயக்கியதால் விபத்து.

முடக்கு சாலையில் டூவீலரில் வேகமாக இயக்கியதால் விபத்து.;

Update: 2025-07-28 04:40 GMT
முடக்கு சாலையில் டூவீலரில் வேகமாக இயக்கியதால் விபத்து. கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் தாலுக்கா , கேபி குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன்வயது 50. இவர் ஜூலை 27ஆம் தேதி மதியம் 3 மணியளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்றார் . அவரது வாகனம் மணவாசி முடக்கு சாலை அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியினில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஷ் கண்ணனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்தராஜேஷ் கண்ணனின் சகோதரி சுப்பம்மாள் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட மாயனூர் காவல்துறையினர் டூவீலரை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News