பொதுமக்களுக்கு ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
குறை தீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2025 சூலை 28 இன்று காலையில் திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் விபத்து நிவாரணம், பட்டா வழங்குதல் உட்பட பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் (இ.ஆ.ப) வழங்கினார். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.