விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

சிறு/குறு விவசாயியாக இருப்பின் சிறு/குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது அமிலத்தை விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.;

Update: 2025-07-28 12:05 GMT
பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நுண்ணீர் பாசனம் செயல்படுத்திட 2025-26 ஆம் நிதியாண்டில் 680 ஹெக்டருக்கு ரூ.476 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் -2, சிறு/குறு விவசாயியாக இருப்பின் சிறு/குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது அமிலத்தை விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த இணையதளம் மூலம் தங்களுடைய வயலில் சொட்டு நீர் அமைக்கவிருக்கும் தேவையான பரப்பிற்கு மானிய கணக்கீட்டை பாசன இடைவெளி (Drip Spacing) வசதியுடன் அறிந்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் ஏற்கனவே பயன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களுடைய மொத்த சொட்டு நீர் பாசன விண்ணப்ப தகவல்களையும் ஆதார் எண் (அ) நில புல எண் மற்றும் உட்பிரிவு எண் மூலம் அறிந்துக் கொண்டு பயன்பெறலாம். மேலும், சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம். தெளிப்பு நீர் பாசனம் மூலம் ஏற்கனவே மானியம் பெற்ற விவசாயிகள் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் திரும்பவும் அமைத்துக் கொள்ளலாம். மேலும், சொட்டு நீர் பாசனம் அமைந்துள்ளவர்கள் சொட்டு நீர் பாசன குழாய்களில் ஏற்படும் உப்புகளை அமிலம் அல்லது குளோரின் கொண்டு நீக்குவதற்கு இணைய மூலம் பதிவு செய்து போட்டிகளில் பலபயன்பெறலாம். நுண்ணீர் பாசன நிறுவன அமைப்பாளர்களின் விவரம் மற்றும் சொட்டு நீர் பாசன பராமரிப்பு வீடியோக்களும் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து சொட்டு நீர் பாசன தகவல்களையும் அறிந்து கொண்டு பாசன வசதிகள் அமைத்து இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நுண்ணீர் பாசன நிறுவனங்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு நுண்ணீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News