கெங்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
கெங்கை அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கை அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ( ஜூலை 28 ) வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன.