கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.

கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி.;

Update: 2025-07-29 06:54 GMT
கரூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 11 மற்றும் 20 பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கீழ் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கரூர் வாசவி மஹாலில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். சம்பந்தப்பட்ட வார்டு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.மனுக்களை பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Similar News