புகலூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ.

புகலூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ.;

Update: 2025-07-29 11:26 GMT
புகலூர்- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ. பட்டா மாற்றம்,ஜாதி சான்று,பென்சன் பெறுதல்,காப்பீடு அட்டை பெறுதல் , ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய ,குடும்ப அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல வேலைகளையும் அரசு அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் தவிர்ப்பதற்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இன்று இத்திட்டம் கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 3, 4 மற்றும் 6-பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் குறைகள் தீர்ப்பதற்காக புகழூரில் உள்ள காந்தியார் மண்டபத்தில் நகர் மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்றார். பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அளித்த மனுக்களை தேவையான சான்றுகளை இணைத்து கணினியில் பதிவேற்றம் செய்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ இளங்கோ. மனு அளித்தவுடன் தங்கள் குறைகள் நிறைவேற்றம் செய்யப்பட்டதால் தமிழக அரசுக்கும் எம்எல்ஏ மற்றும் நகர் மன்ற தலைவருக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் புகலூர் வட்டாட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News