கரூரில் தீப்பந்தம் கையில் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர் சங்கத்தினர்.

கரூரில் தீப்பந்தம் கையில் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர் சங்கத்தினர்.;

Update: 2025-07-29 13:34 GMT
கரூரில் தீப்பந்தம் கையில் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர் சங்கத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலை பணித்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் கரூர் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தீபந்தம் கையில் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் மாவட்ட தலைவர் செவந்திலிங்கம் தலைமையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சாலை பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது எனவும், சாலை பணியாளர்களில் உயர்நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் வழங்க வேண்டும் , மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும் , தனியார் மயப்படுத்தலை கைவிட வேண்டும் , மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரித்திட வேண்டும் , கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் , தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊதிய மாற்றம் 5,200 ல் இருந்து 20,200 ஆகவும், தர ஊதியம் 1900 வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் ராமமூர்த்தி , மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன்,மாவட்ட செயலாளர் பொன். ஜெயராம் , மாவட்ட நிர்வாகிகள் செல்வராசு , ராமமூர்த்தி , சரவணன் , பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Similar News